வைரலாகும் நடிகர் அஜித்தின் புதிய கெட்டப்!

ஷாலினி, அஜித்குமார், மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக்
ஷாலினி, அஜித்குமார், மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக்

நடிகர் அஜித்தின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், ‘வலிமை’. ஹெச்.வினோத் இயக்கிய இந்தப் படத்தில் இந்தி நடிகை ஹூமா குரேஷி நாயகியாக நடித்திருந்தார். தெலுங்கு ஹீரோ கார்த்திகேயா வில்லனாக நடித்திருந்தார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார். போனி கபூர் இயக்கியிருந்தார். இந்தப் படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து, ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கிறார். ‘ஏகே 61’ என்ற அந்தப் படத்தில் அஜித், வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அஜித்தின் மகன் ஆத்விக் பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் நடிகர் அஜித் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.

மனைவி ஷாலினியுடன் அஜித்குமார்
மனைவி ஷாலினியுடன் அஜித்குமார்

அதில் வெள்ளைத் தாடியுடன் வேறு விதமான கெட்டப்பில் அஜித் இருக்கிறார். அவர் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் அஜித்தின் கெட் அப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுதான் புதிய படத்தின் அவருடைய கெட்டப் என்றும் கூறி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in