நடிகர் அஜித்தின் 'துணிவு' படத்திற்கு இத்தனை திரையரங்குகள் ஒதுக்கீடா?

நடிகர் அஜித்தின் 'துணிவு' படத்திற்கு  இத்தனை திரையரங்குகள் ஒதுக்கீடா?

நடிகர் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் அதிகமான திரையரங்குகளில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் -போனி கபூர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'துணிவு'.இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர், சமுத்திரகனி, சிபி சந்திரன் உட்பட நடித்துள்ளனர். இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. மேலும் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் 'துணிவு' படம் திரையிடுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள திரையரங்குகளின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வரை சுமார் 470-க்கும் அதிகமான திரையரங்குகள் 'துணிவு' திரைப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தை காட்டிலும் 'துணிவு' திரைப்படத்திற்கு அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் 'துணிவு' படத்தின் வசூல் அதிக அளவு இருக்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in