பொறாமையோ, வெறுப்புணர்வோ வேண்டாம்... வாழு,வாழவிடு: அஜித் அறிவுரை!

பொறாமையோ, வெறுப்புணர்வோ வேண்டாம்... வாழு,வாழவிடு: அஜித் அறிவுரை!

பொறாமையோ வெறுப்புணர்வோ வேண்டாம், நேர்மறை எண்ணங்களை மட்டும் மனதில் கொள்ளுங்கள் என நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக ரிலீஸுக்கு தயாராக உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படமும் வெளியாக உள்ளது. இதனால் இப்போதே ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் வார்த்தை யுத்தம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித் தெரிவித்ததாக அவரின் மேலாளர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், “ உங்களை எப்போதும் ஊக்கப்படுத்தி முன்னேற்றுபவர்களை, உங்களைச் சுற்றி வைத்துக்கொள்ளுங்கள். எந்த எதிர்மறை எண்ணங்களுக்கும் இடம் கொடுக்காதீர்கள். உங்கள் இலக்கை உயர்த்திக்கொண்டே இருங்கள். எப்போதும் உற்சாகத்தோடு இருங்கள்.

நேர்மறை எண்ணங்களை மட்டும் மனதில் கொள்ளுங்கள், இனி நமக்கு நல்ல நேரம்தான். பொறாமையோ வெறுப்புணர்வோ வேண்டாம். உங்களுக்குள்ளிருக்கும் மிகவும் சிறப்பானவற்றை அனைவருக்கும் வெளிக்காட்டுங்கள். வாழு... வாழவிடு... அளவில்லா அன்புடன் அஜித்” என தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in