`துணிவு’க்காக பாங்காக் பறக்கும் அஜித்!

`துணிவு’க்காக பாங்காக் பறக்கும் அஜித்!

நடிகர் அஜித் ‘துணிவு’ படத்திற்காக பாங்காக் செல்ல உள்ளார்.

‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படத்திற்கு பிறகு நடிகர் அஜித், ஹெச். வினோத் மூன்றாவது முறையாக இணையும் கூட்டணி ‘துணிவு’. நேற்று மாலை படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை வெளியிடப்பட்டது. படத்தின் இரண்டாவது பார்வை இன்று மதியம் வெளியாக இருக்கிறது.

வங்கி கொள்ளை மற்றும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில் நடிகை மஞ்சு வாரியரும் நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் ஷெட்யூல் பிரேக்கில் அஜித், மஞ்சு வாரியர் இணைந்து பைக் ரைட் சென்றப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாயின.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிக் கட்டப்படப்பிடிப்புக்காக படக்குழு இன்று பாங்காக் செல்ல உள்ளது. அங்கு கிட்டத்தட்ட 25 நாட்கள் சண்டைக் காட்சிகளை படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். அஜித்துடன் மஞ்சு வாரியரும் இந்தக் காட்சிகளில் இடம் பெறுகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு லடாக்கில் இருந்து திரும்பிய அஜித் இன்று பாங்காக் செல்கிறார்.

‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களை அடுத்து ‘துணிவு’ படத்தையும் போனிகபூர் தயாரிக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி, நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளன்று படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட்படி நேற்று மாலை வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் ‘துணிவு’ படம் குறித்தான அறிவிப்பை சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in