மோட்டார் சைக்கிளில் தென்காசிக்கு வருகை தந்த நடிகர் அஜித்? - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

மோட்டார் சைக்கிளில் தென்காசிக்கு வருகை தந்த நடிகர் அஜித்? - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

பைக் ரேஸ் மீது அதீத காதல் கொண்ட அஜித், அவ்வப்போது மோட்டார் சைக்கிள் பயணம் செல்வது வழக்கம். அந்த வகையில் அவர் வாங்கிய பிஎம்டபுள்யு பைக்கில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் இருந்து விழுப்புரம், ஆத்தூர், சேலம், தர்மபுரி வழியாக பெங்களூர் சென்றார். அப்போது அவரின் பைக் பயணம் பெரிய அளவில் பேசப்பட்டது.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் அவ்வப்போது மோட்டார் சைக்கிளில் இந்தியா முழுவதும் நடிகர் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை அவர் சென்று வந்த இடங்கள் குறித்து சமீபத்தில் ஒரு ரூட் மேப் வெளியான சூழலில், தற்போது தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் தென்காசி மாவட்டத்திற்கு அஜித் மோட்டார் சைக்கிளில் வந்ததாக கூறப்படுகிறது.

தென்காசியில் இருந்து மதுரை நோக்கி இடைகால் பகுதியில் உள்ள திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அஜித்தின் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருக்கும்போது, அதை பார்த்த சில இளைஞர்கள் அவருடன் சேர்த்து செல்பி எடுத்துள்ளனர்.

மேலும், அஜித்திற்கு வணக்கம் செலுத்தும் அந்த இளைஞர்களுக்கு, அவரும் திருப்பி வணக்கம் செலுத்துவது போன்ற வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் அஜித் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்தார் என்பதை தெரிந்து கொண்ட அஜித் ரசிகர்கள் அவரை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in