உலகம் சுற்றும் பயணத்தில் நடிகர் அஜித்: சூப்பர் அப்டேட் கொடுத்த மேலாளர்!

உலகம் சுற்றும் பயணத்தில் நடிகர் அஜித்: சூப்பர் அப்டேட் கொடுத்த மேலாளர்!

நடிகர் அஜித்தின் உலக சுற்றுப்பயணம் குறித்து அவரது மேலாளர் ட்விட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

‘துணிவு’ படத்தின் போதும் அதற்குப் பிறகும் நடிகர் அஜித்துடைய பைக் டூர் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களிடையே வைரலானது. இதற்கடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒப்பந்தமாகியுள்ள படத்தை முடித்ததும் நடிகர் அஜித் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போகிறார் எனவும் அதற்காக கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் நடிப்பதில் இருந்து விலகி இருக்கப் போகிறார் எனவும் சொல்லப்பட்டது.

மேலும், சமீபத்தில் தாய்லாந்து, கார்கில், லடாக், ஜம்மு, ஸ்ரீநகர்ம் மணாலி என பல இடங்களுக்கு அஜித் பிஎம்டபிள்யூ பைக்கில் சென்ற புகைப்படங்களும் வைரலானது.

இதுகுறித்து நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, தன்னுடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், "நடிகர் அஜித்குமார் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பயணித்திருப்பதன் மூலமாக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் என்ற திட்டத்தின் முதல் பாகத்தை நிறைவு செய்துள்ளார். இது ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும். மேலும், அவர் இந்தியாவில் எங்கெல்லாம் போனாரோ அங்கெல்லாம் அவருக்கு நிறைய அன்பு மக்களிடம் இருந்து கிடைத்தது. அட்வென்ச்சர் ரைடர்ஸ் அனைவருக்கும் இது ஒரு பெருமையான தருணம்" என மகிழ்ச்சியுடன் இந்த செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in