ரூ.20 லட்சம் பைக்கில் அஜித் அசத்தல் போஸ்: வெளிநாட்டில் இது வேற லெவல் டூர்!

ரூ.20 லட்சம் பைக்கில் அஜித் அசத்தல் போஸ்: வெளிநாட்டில் இது வேற லெவல் டூர்!

நடிகர் அஜித்குமார் வெளிநாட்டில் பைக் பயணத்தில் ஈடுபட இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நடிகர் அஜித்குமார், ஹெச். வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். அஜித்தின் 61-வது படமான இதன் ஷூட்டிங் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வந்தது. அந்த ஷெட்யூல் முடிவடைந்த நிலையில், அடுத்த ஷெட்யூல் விரைவில் தொடங்க இருக்கிறது.

இதற்கிடையே பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்ட அஜித்குமார், கிடைக்கும் இடைவெளியில் பைக்கில் நீண்ட தூரம் சுற்றுவது வழக்கம். ’வலிமை’ படப்பிடிப்பு முடிந்ததும் அவர் பைக்கில் நண்பர்களுடன் இந்தியா முழுவதும் சுற்றுலா சென்று வந்தார்.

இந்நிலையில் இப்போது அவர், இங்கிலாந்தில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்கிறார். அங்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள BMW 1200RT பைக்குடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அவர் இந்தியா திரும்பியதும் அவர் நடிக்கும் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in