தமிழ் திரையுலகில் முதல் ஆளாக வாக்களித்தார் நடிகர் அஜித்!

வாக்களித்த நடிகர் அஜித்
வாக்களித்த நடிகர் அஜித்

தனது ஜனநாயக கடமையாற்றுவதற்காக திரை உலகில் முதல் ஆளாக வாக்குச்சாவடிக்கு முன்னதாகவே வந்திருந்து காத்திருந்து வாக்களித்தார் நடிகர் அஜித். 

நாட்டின் 18 வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட 12 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மக்களவை தேர்தல் 2024
மக்களவை தேர்தல் 2024

வயதானவர்களும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வீடுகளுக்கே சென்று வாக்குகளை பதிவு செய்யும் முறையும் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் திரையுலகங்கள் பலரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். 

நடிகர் அஜித்
நடிகர் அஜித்

திரை உலகினர் பலரும் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் இன்று வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 18 நிமிடங்கள் முன்னதாகவே எல்லோருக்கும் முன்னதாகவே வாக்குச்சாவடிக்கு வந்தார் நடிகர் அஜித். திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு காலை 6.42 மணிக்கு வந்த நடிகர் அஜித்குமார் தனது ரசிகர்க்ளால் பிறருக்குத் தொல்லை வந்துவிடக்கூடாது என்பதற்காக முன்னதாகவே வந்திருந்தார். 

அவரை உடனடியாக வாக்குச்சாவடிக்கு உள்ளே அனுமதித்த அதிகாரிகள் அவரை வாக்குப் பதிவு தொடங்கும் வரை அங்கே அமர வைத்திருந்தனர். அவருடன் அவரது மனைவி ஷாலினியும் உடன் வந்திருந்தார். அஜித்தின் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கிய உடனேயே அவர் தனது வாக்கைப் பதிவு செய்தார். அவர் வாக்குச்சாவடிக்கு வந்திருப்பதை அறிந்த பிறகு அதிக அளவில் வாக்காளர்களும், ரசிகர்களும் அங்கு திரண்டனர் அவர்களை போலீஸார் ஒழுங்கு படுத்தினர். பின்னர் அஜித் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியே அனுப்பி வைக்கப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in