விடாமல் துரத்தி வீடியோ எடுத்த ரசிகர்... கோபத்தில் அஜித் செய்த காரியம்!

நடிகர் அஜித்
நடிகர் அஜித்

துபாயில் விடாமல் துரத்தி வீடியோ எடுத்த ரசிகர் மீது நடிகர் அஜித் கோபப்பட்டுள்ளார். கோபத்தில் அவர் செய்துள்ள அந்த விஷயம் குறித்தான வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு பிரேக்கின் போது துபாயில் உள்ள தனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறார். இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் தனது மகள் அனோஷ்காவின் பிறந்தநாளுக்காக அஜித் குடும்பத்துடன் துபாயில் இருந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது. அங்கு நள்ளிரவில் போட்டில் அஜித் சென்றபோது அங்கிருந்த ரசிகர்கள் ‘தல தல’ என்று உற்சாகக் குரல் கொடுத்தனர். அஜித்தும் அவர்களைப் பார்த்து கையசைத்தார்.

ஆனால், இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அங்கிருந்த ரசிகர் ஒருவர் விடாமல் அஜித்தை துரத்தி துரத்தி வீடியோ எடுத்திருக்கிறார். இதனால், அஜித் கோபமடைந்து அந்த ரசிகரின் ஃபோனை வாங்கி அந்த வீடியோவை டெலிட் செய்திருக்கிறார். இந்த வீடியோதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்தின் இந்த செயல் அவரது ரசிகர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் அஜித் வாக்களிக்க வந்தபோது அங்கு ஒருவர் செல்ஃபி எடுக்க முயல, கோபப்பட்ட அஜித் இதேபோன்று அவரது மொபைலை வாங்கி எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

அதிரடி! தமிழகம் முழுவதும் 1847 காவலர்கள் இடமாற்றம்!

முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: ஜன.9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்!

மம்தாவிடம் பிச்சை கேட்கவில்லை... காங்கிரஸ் கடும் கோபம்!

ஓடும் காருக்குள்ளேயே நடந்த கல்யாணம்! சினிமாவை விஞ்சிய காதல் ஜோடி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in