பிரபல நடிகர் திடீர் மரணம்: முதலமைச்சர் இரங்கல்

பிரபல நடிகர் திடீர் மரணம்: முதலமைச்சர் இரங்கல்
அபிஷேக் சட்டர்ஜி

பிரபல நடிகர் திடீரென மரணமடைந்திருப்பது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல வங்காள நடிகர் அபிஷேக் சட்டர்ஜி என்ற அபிஷேக் சட்டோபத்யாய். வங்க மொழியில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். 1986-ம் ஆண்டு தருண் மஜூம்தார் இயக்கிய போத்போலா படத்தில் அறிமுகமான இவர், கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ’லவ்வர்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

அபிஷேக் சட்டர்ஜி
அபிஷேக் சட்டர்ஜி

கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் காணப்பட்டார். புதன்கிழமை கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் உடல்நிலை மோசமானது. மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அக்கம் பக்கத்தினர் முடிவு செய்தனர். அங்கு செல்ல மறுத்துவிட்ட அவர், வீட்டிலேயே ஓய்வெடுக்க முடிவு செய்தார். இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென உயிரிழந்தார். அவருக்கு வயது 58. அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அபிஷேக்கின் திடீர் மரணம் வங்காளத் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனது. திரையுலகினரும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ``அபிஷேக்கின் அகால மரணம் வருத்தத்தை அளித்துள்ளது. அவர் திறமையான நடிகர். அவர் மறைவு திரையுலகுக்கு பெரும் இழப்பு. அவர் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in