`விக்ரம்’ சூப்பர் ஹிட்: கமல்ஹாசனை கௌரவித்த ஆமிர்கான்

`விக்ரம்’ சூப்பர் ஹிட்: கமல்ஹாசனை கௌரவித்த ஆமிர்கான்

ரெட் ஜெயன்ட் மூவிஸின் 15 வருட சினிமா பயணத்தைக் கொண்டாடும் விதமாக, அதில் பங்காற்றியவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் நடிகர் கமல்ஹாசன், பிரபல இந்தி நடிகர் ஆமீர்கான், சிம்பு, கார்த்தி, விஷால், விக்ரம், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ரெட் ஜெயன்ட் நிறுவனப் படங்களில் பணிபுரிந்த இயக்குநர்கள் உள்ளிட்ட டெக்னீஷியன்கள் கவுரவிக்கப்பட்டனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’விக்ரம்’ படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து நடிகர் கமல்ஹாசனுக்கு நினைவு பரிசு வழங்கி நடிகர் ஆமிர்கான் கவுரவித்தார். பின்னர் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் 54-வது படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டார்.

இந்த மேடையில், மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்துக்கு ’கலகத் தலைவன்’ என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டது. இந்த விழாவுக்கு மிக முக்கியமான விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிப்பது பற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், ’’15 வருட ரெட் ஜெயன்ட் மூவிஸின் சினிமா பயணத்தைக் கொண்டாடும் விதமாக, உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in