நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகத்தில் அதிரடி ரெய்டு: என்ன காரணம்?

நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகத்தில் அதிரடி ரெய்டு: என்ன காரணம்?

மதுரையில் உள்ள நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகத்தில் வணிகவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல காமெடி நடிகர் நடிகர் சூரி, தனது சொந்த ஊரான மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் இந்த ஹோட்டல் திறக்கப்பட்டது. சூரியின் சகோதரர் லட்சுமன் என்பவர் அம்மன் உணவகத்தை கவனித்து வருகிறார். நல்ல தரமான உணவை கொடுத்து மதுரை மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது அம்மன் உணவகம். சமீபத்தில் சூரியின் உணவகத்தில் உணவு சாப்பிட்ட நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், சூரியின் சகோதரிடம், இது போன்ற தரமான உணவை குறைந்த விலையில் மதுரை அரசு மருத்துவமனையில் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்பின் சில மாதங்களில் மதுரை அரசு மருத்துவமனையில் சூரியின் அம்மன் உணவகம் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தலைமையில் திறக்கப்பட்டது.

இந்நிலையில், மதுரையில் உள்ள நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் இன்று காலையில் வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கான கட்டணத்தை வசூலிப்பதாக பொதுமக்கள் அளித்த புகார் என்பது சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. உணவுக்கு மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்ட உணவு பொருள்களுக்கு ஆவணங்கள் இல்லாதது பற்றியும் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். புகார் தொடர்பாக 15 நாளில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகை சூரிக்கு வணிகவரித்துறை உத்தரவிட்டுள்ளது.

பிரபல காமெடி நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் தமிழக வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in