மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரபல வில்லன் நடிகர் சடலமாக மீட்பு!

மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரபல வில்லன் நடிகர் சடலமாக மீட்பு!

வீட்டருகே இருந்த மரத்தில், தூக்கில் தொங்கிய நிலையில், வில்லன் நடிகர் சடலமாக மீட்டுக்கப்பட்டார்.

பிரபல மலையாள நடிகர் என்.டி.பிரசாத். பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த இவர், ’ஆக்‌ஷன் ஹீரோ பைஜூ’ என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதில் நிவின் பாலி ஹீரோ. அனு இம்மானுவேல், சைஜூ குரூப், ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் நடித்த படம் இது. இந்தப் படம் தவிர இபா, கர்மணி போன்ற படங்களிலும் பிரசாத் நடித்துள்ளார்.

கேரள மாநிலம் கொச்சி அருகிலுள்ள களமச்சேரியை சேர்ந்த இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் நேற்று இரவு தனது வீட்டுக்கு எதிரில் இருந்த மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவருக்கு வயது 43.

மன அழுத்தம் மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். நடிகர் பிரசாத் மீது, பல்வேறு காவல் நிலையங்களில் போதைப் பொருள் வழக்கு உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in