படப்பிடிப்பில் திடீர் விபத்து: நடிகர் நாசருக்கு நடந்தது என்ன?

படப்பிடிப்பில் திடீர் விபத்து: நடிகர் நாசருக்கு நடந்தது என்ன?

ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் நாசர் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார்.

பிரபல நடிகர் நாசர். தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு படம் ஒன்றில், நடிகைகள் மெஹ்ரின், சுகாசினி, நடிகர் சாயாஜி ஷிண்டே ஆகியோருடன் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா போலீஸ் அகாடமியில் நேற்று நடைபெற்றது. அப்போது படப்பிடிப்பு முடிந்து படிக்கட்டுகளில் நாசர் இறங்கி வந்த போது கால் வழுக்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதை அடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து நாசரின் மனைவி கமீலாவிடம் கேட்டபோது, ‘‘லேசான காயம்தான். பயப்படும்படி ஏதுமில்லை. அவர் நலமாக இருக்கிறார்’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in