
ஏ.ஆர்.ரஹ்மானுக்குச் சொந்தமான ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் படப்பிடிப்பிற்கு மின்விளக்கு பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த லைட்மேன் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டி உள்ளது. இதில் நடிகர் சத்யராஜ் நடிக்கும் ‘வெப்பன்’ படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் போது லைட்மேன் குமார் என்பவர் 40 அடி உயரத்தில் விளக்குகளைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திடீரென கால் தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலே குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படப்பிடிப்பு தளத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் படப்பிடிப்புக் குழுவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.