‘மாநாடு’ தெலுங்கு ரீமேக்கில் ராணாவின் தம்பி

சிலம்பரசன்
சிலம்பரசன்

‘மாநாடு’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில், நடிகர் ராணாவின் தம்பி அபிராம் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பலர் நடிப்பில் உருவான படம், ’மாநாடு’. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அபிராம்
அபிராம்

வெங்கட்பிரபு இயக்கிய இந்தப் படத்தில், அப்துல் காலிக் என்கிற கேரக்டரில் சிலம்பரசன் நடித்துள்ளார். டைம் லூப் கான்செப்ட்டில் உருவான இந்தப் படம். தமிழில் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை, சுரேஷ் பாபுவின் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சுரேஷ் பாபு, நடிகர் ராணாவின் தந்தை. அதனால், இந்தப் படத்தின் ரீமேக்கில் ராணா நடிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் ராணாவின் தம்பி, அபிராம் இதன் ரீமேக்கில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in