ஆமிர்கானின் ’லால் சிங் சத்தா’ ரிலீஸ் தேதி மாற்றம்

’லால் சிங் சத்தா’
’லால் சிங் சத்தா’

ஆமிர்கான் நடித்துள்ள ’லால் சிங் சத்தா’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

டாம் ஹாங்ஸ் நடிப்பில், 1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கிய இந்தப் படம் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவானது. ஹாலிவுட்டில் வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. ஐந்து ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்தப் படத்தின் உரிமையைப் பெற்று, இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் ஆமிர்கான்.

அட்வைத் சந்தன் இயக்கும் இந்தப் படத்துக்கு 'லால் சிங் சத்தா’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். இதில் நாயகியாக கரீனா கபூர் நடித்துள்ளார். இந்தப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தார். பின்னர், அவர் அதில் இருந்து விலகினார். அந்த கேரக்டரில் நாக சைதன்யா நடித்துள்ளார். ஷாருக் கான் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

ஆமிர்கான்
ஆமிர்கான்

இந்தப் படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதன் ரிலீஸை, ஆகஸ்ட் 11-ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளனர். இதுகுறித்து ஆமிர்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’‘லால் சிங் சத்தா படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகாது. எங்களால் சரியான நேரத்தில் படத்தை முடிக்க முடியாததால், ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருக்கிறோம். இதற்காக தங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபாஸ், கீர்த்தி சனான், சைஃப் அலி கான் நடித்துள்ள ’ஆதிபுருஷ்’ படக் குழுவுக்கும் தயாரிப்பாளர் பூஷன்குமார், இயக்குநர் ஓம் ராவத் ஆகியோருக்கும் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஆதிபுருஷ் படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாவதாக இருந்தது. இப்போது அதன் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in