தனுஷ், ரூஸோ சகோதரர்களுக்கு பிரபல ஹீரோ கொடுத்த குஜராத்தி டின்னர்!

தனுஷ், ரூஸோ சகோதரர்களுக்கு பிரபல ஹீரோ கொடுத்த குஜராத்தி டின்னர்!

நடிகர் தனுஷ் மற்றும் ’தி கிரே மேன்’ இயக்குநர்களுக்கு பிரபல ஹீரோ, பாரம்பரிய குஜராத்தி டின்னர் கொடுத்து அசத்தி இருக்கிறார்.

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம், ’தி கிரே மேன்’. 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்', 'எண்ட்கேம்' உட்பட பல மிரட்டலான ஆக்‌ஷன் படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ சகோதரர்கள் இயக்கியுள்ளனர். இந்தப் படத்தில் ரியான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகியோருடன் இணைந்து தனுஷ் நடித்துள்ளார்.

இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் தனுஷ் நடித்த ஆக்‌ஷன் காட்சிகளின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இந்தப் படத்தின் சிறப்பு பிரீமியர் மும்பையில் நேற்று நடந்தது. இதில் கலந்துகொள்ள, ரூசோ சகோதரர்களும் படக்குழுவைச் சேர்ந்த சிலரும் இந்தியா வந்துள்ளனர்.

இந்த பிரீமியர் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் தமிழ்ப் பாரம்பரிய படி, வேஷ்டி, சட்டை அணிந்து கலந்துகொண்டார். இதில் கலந்துகொள்ளும்படி பிரபல பாலிவுட் ஹீரோ ஆமிர்கானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ’லால் சிங் சத்தா’ பட ரிலீஸ் வேலைகளில் பிசியாக இருப்பதால் அவர் கலந்துகொள்ள வில்லை.

ஆனால், நடிகர் தனுஷ், தி கிரே மேன் இயக்குநர்கள் மற்றும் படக்குழுவினருக்கு தன் வீட்டில் சிறப்பு டின்னருக்கு ஏற்பாடு செய்திருந்தார் நடிகர் ஆமிர்கான். இதில் குஜராத்தி பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த விருந்தில் ஆமிர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவும் கலந்துகொண்டார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in