சர்ச்சையைக் கிளப்பிய 'ஆதிபுருஷ்' டிரெய்லர்: நடிகர் பிரபாஸுக்கு கோர்ட் நோட்டீஸ்

சர்ச்சையைக் கிளப்பிய 'ஆதிபுருஷ்' டிரெய்லர்: நடிகர் பிரபாஸுக்கு கோர்ட் நோட்டீஸ்

ராமர் உள்ளிட்டோரை தவறாக சித்தரித்துள்ளதாக 'ஆதிபுருஷ்' படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் பிரபாஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ராமாயணத்தை மையமாக வைத்து 'ஆதிபுருஷ்' என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. 'பாகுபலி' புகழ் பிரபாஸ் ராமராக நடித்துள்ளார். சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் டிரெய்லர் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் இடம் பெற்றுள்ள காட்சிகள் வீடியோ கேம் போல் இருப்பதாகவும், ராவணனை தவறாக சித்தரித்து இருப்பதாகவும் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில், 'ஆதிபுருஷ்' படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று அயோத்தி ராமர் கோயிலின் தலைமை குரு வலியுறுத்தினார்.

இந்த நிலையில் இப்படத்திற்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 'ஆதிபுருஷ்' படத்தில் ராமரையும், ராவணனையும், அனுமனையும் தவறாக சித்தரித்து இருப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகர் பிரபாஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in