'ஜெயிலர்' திரைப்படத்திற்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்

'ஜெயிலர்' திரைப்படத்திற்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தின் அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 'ஜெயிலர்' திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகிபாபு உள்பட பலர் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை தமன்னாவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் படத்தின் அப்டேட்டை இன்று வெளியிட்டுள்ளது. 'ஜெயிலர்’ திரைப்படத்தில் ஏற்கெனவே பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானதை அதை உறுதி செய்வது போல அந்த அப்டேட் வெளியாகியுள்ளது.

கன்னட நடிகர் சிவராஜ்குமார் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளதோடு, சிவராஜ்குமார் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in