நடிகர் விஷாலின் 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பில் திடீர் தீவிபத்து: வைரலாகும் வீடியோ

‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பில் தீ விபத்து
‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பில் தீ விபத்துநடிகர் விஷாலின் 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பில் திடீர் தீவிபத்து: வைரலாகும் வீடியோ

நடிகர் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஷால் ’லத்தி’ படத்திற்குப் பிறகு தற்போது ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் தற்போது நடந்து வருகிறது.

இதன் சண்டைக் காட்சி அங்கு செட் அமைத்து படமாக்கப்பட்டு கொண்டிருந்தபோது, வெளியிருந்த வந்த லாரி நிற்காமல் செட்டின் மீது மோதி தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விபத்தால் படப்பிடிப்பில் பங்கேற்ற யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இதன் போஸ்டரில் விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் வித்தியாசமான கெட்டப்பில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in