'தலைவா... யூ ஆர் கிரேட்’: ‘ஜெயிலர்’ படத்திற்கு நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்!

'தலைவா... யூ ஆர் கிரேட்’: ‘ஜெயிலர்’ படத்திற்கு நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்!

’ஜெயிலர்’ திரைப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

’ஜெயிலர்’ படத்திற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தும், ‘மாவீரன்’ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த வாழ்த்து குறித்தும் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ‘காஷ்மீரில் இரவு பகலாக படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருப்பதால் இந்த வீடியோவை தாமதமாக வெளியிடுகிறேன். ’சூப்பர் ஸ்டார்’ ரஜினி சார் ‘மாவீரன்’ படம் பார்த்து விட்டு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். எனக்கும், படக்குழுவுக்கும் ரொம்பவே ஸ்பெஷலான விஷயம் இது. ‘ஜெயிலர்’ படத்திற்காக அவர் பிசியாக இருந்ததால், ‘மாவீரன்’ அவரால் பார்க்க முடியாமல் மிஸ் ஆகி விடுமே என நினைத்தேன். ஆனால், அத்தனை பிசிக்கும் நடுவில் அவர் படம் பார்த்து விட்டு வாழ்த்தியுள்ளார். நீங்கள் எப்போதுமே கிரேட் தலைவா!

’படம் பார்த்தேன். சூப்பராக இருந்தது சிவா! என்றார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. அவருக்கு பேனர் வைத்து, அவரைப் பார்த்து வளர்ந்து சினிமாவுக்கு வந்தவன் நான். அவரிடம் இருந்தே வாழ்த்து வந்தது மகிழ்ச்சி. நாளை அனைவருக்குமே ஸ்பெஷல் நாள். ‘ஜெயிலர்’ வெளியாவதால் சரித்திரத்தில் முக்கியமான நாள். படம் வெற்றி பெற மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in