`துணிவு’ படத்தின் பாடல் காட்சி: வெளியான அப்டேட்!

`துணிவு’ படத்தின் பாடல் காட்சி: வெளியான அப்டேட்!

நடிகர் அஜித்தின் ‘துணிவு’ படத்தின் பாடல் காட்சி குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கக் கூடிய திரைப்படம் ‘துணிவு’. படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் மற்றும் புரோமோஷன் பணிகள் தீவிரமெடுக்கத் தொடங்கியுள்ளது. நடிகர் அஜித் மற்றும் மஞ்சுவாரியர் இருவரும் சமீபத்தில் டப்பிங் பேசுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், படத்தில் இருந்து ‘சில்லா சில்லா’ என்ற வைசாகின் பாடலை இசையமைப்பாளார் அனிருத் பாடியிருக்கிறார் என இசையமைப்பாளர் ஜிப்ரான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

ஏற்கெனவே, நடிகர் அஜித்தின் ‘ஆலுமா டோலுமா’, ’சர்வைவா’ உள்ளிட்ட ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். எனவே, ‘துணிவு’ படத்தில் அவர் பாடியுள்ள இந்தப் பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு உள்ளது.

மேலும் ‘துணிவு’ படத்தின் ஒரு பாடல் காட்சி வரும் 7-ம் தேதியில் இருந்து மூன்று நாட்களுத் தொடர்ந்து படமாக்கப்பட உள்ளது. இந்தப் பாடலுக்கான நடனக் காட்சியைக் கல்யாண் மாஸ்டர் நடனமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in