இசைஞானியுடன் இணைந்த இசைப்புயல் - இளையராஜாவை சந்தித்த ரஹ்மான்!

இசைஞானியுடன் இணைந்த இசைப்புயல் - இளையராஜாவை சந்தித்த ரஹ்மான்!

பிரபல இசையமைப்பாளர்களான இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் விமானநிலையத்தில் சந்தித்துக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இளையராஜாவுடன் இருக்கும் ஒரு வீடியோ கிளிப்பை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “ நாங்கள் இருவரும் இரண்டு வேறு கண்டங்களில் இருந்து வருகிறோம். ஆனால் இலக்கு எப்போதும் தமிழ்நாடுதான்’ என்று குறிப்பிட்டுள்ளார். இசையமைப்பாளர்கள் இருவரும் ஒரே வீடியோவில் இடம்பெற்றுள்ளதால் அவர்களின் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பாக இசைஞானி இளையராஜா ஒரு இசை கச்சேரிக்காக ஹங்கேரி நாட்டிற்கு சென்றிருந்தார். ஹங்கேரி தலைநகரான புடாபெஸ்டில் இருந்தபடி சில புகைப்படங்களையும் அவர் ட்வீட் செய்திருந்தார். அதேபோல இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கனடா நாட்டிற்கு சென்றிருந்தார். ரஹ்மானின் இசை பங்களிப்பை பாராட்டி கனடாவின் மர்காம் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை அந்த நாட்டு அரசு சூட்டியுள்ளது. இது தொடர்பான விழாவில் கலந்துகொள்வதற்காக அவர் கனடாவுக்கு சென்றிருந்தார். அங்கே நடந்த பல்வேறு நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ரஹ்மான் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in