ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை பாடிய தேசப்பற்று பாடல்: கனிமொழி வெளியிட்டார்

ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை பாடிய தேசப்பற்று பாடல்: கனிமொழி வெளியிட்டார்

ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கையும் இசையமைப்பாளருமான இஷ்ரத்காதரி இசையமைத்து பாடிய பாடலின் முதல் பிரதியை திமுக எம்பி கனிமொழி வெளியிட்டார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கையும் இசையமைப்பாளருமான இஷ்ரத்காதரி இசையமைத்து பாடிய மகாகவி பாரதியார் எழுதிய "எந்தையும் தாயும் - வந்தேமாதரம்" பாடல் இன்று வெளியானது. நம் நாட்டின் பெருமைகளை கூறவும் தன் தாய் நாட்டின் மீதுள்ள தன் நன்றியை வெளிப்படுத்தவும் இப்பாடலை உருவாக்கியதாகவும் இப்பாடலை தன் தாய் நாட்டிற்காக உருவாக்கியதில் மகிழ்ச்சி கொள்வதாகவும் இஷ்ரத்காதரி தெரிவித்து இருக்கிறார்.

தேசப்பற்றுமிக்க இந்த பாடலை இயக்குநர் மாதேஷ் இயக்கியுள்ளார். இப்பாடலுக்கு ஒளிப்பதிவாளர் குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாட்டுப்பற்றுமிக்க இப்பாடலின் முதல் பிரதியை திமுக எம்பி கனிமொழி பெற்றுக்கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in