’எதிர்நீச்சல்’ சீரியலில் புது திருப்பம்; ஆதி குணசேகரன் இடத்தை நிரப்பும் புது கதாபாத்திரம்?

நடிகர் மாரிமுத்து
நடிகர் மாரிமுத்து

’எதிர்நீச்சல்’ சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு புது நடிகர் வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கதையில் புது ட்விஸ்ட் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து கடந்த வாரத்தில் தீடீர் மாரடைப்பு காரணமாக காலமானது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சீரியலில் இவரது கதாபாத்திரத்தில் அடுத்தது யார் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். நடிகர்கள் வேலராமமூர்த்தி, பசுபதி என பலரது பெயர்கள் அடிபட்டது.

எதிர்நீச்சல் தொடர்
எதிர்நீச்சல் தொடர்

ஆனால், யாரும் செட் ஆகாத நிலையில் தற்போது ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டில் இருந்து வெளியேறி விடுவதாக கதையை மாற்றி இருந்தார் இயக்குநர் திருச்செல்வம். தற்போது ஒளிபரப்பாகி வரும் எபிசோட்களில் குணசேகரன் சொத்துக்களை தனது தம்பிகள், தங்கை மற்றும் அம்மா பெயரில் பிரித்து எழுதி வைத்து விட்டு, வீட்டை விட்டு சென்று விட்டதாக கதை நகர்கிறது.

இதுமட்டுமல்லாது, புதிய ட்விஸ்டாக ஆதி குணசேகரனுக்கு முன்பே விசாலாட்சிக்கு ஆதிபகவன் என்ற இன்னொரு மகன் இருந்ததாக ஓலைச்சுவடியைப் பார்த்து ஜோசியர் கூறினார். இதை விசாலாட்சியும் மறுக்கவில்லை. ஆகவே, வீட்டை விட்டு வெளியேறிய ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை அப்படியே விட்டுவிட்டு, புதிய கதாபாத்திரமான ஆதிபகவனை சுற்றி கதையை நகர்த்த திட்டமிட்டிருக்கிறாராம் எதிர்நீச்சல் இயக்குநர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in