`கொஞ்சம் குறும்பு; நிறைய காதல்’- மனைவியுடன் ரொமாண்டிக் புகைப்படம் பகிர்ந்த ஹரிஷ் கல்யாண்!

`கொஞ்சம் குறும்பு; நிறைய காதல்’- மனைவியுடன் ரொமாண்டிக் புகைப்படம் பகிர்ந்த ஹரிஷ் கல்யாண்!

நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது மனைவியுடன் ரொமாண்டிக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

’சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். ‘பொறியாளன்’, ‘ப்யார் ப்ரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் 28-ம் தேதி இவருக்கும் சென்னையைச் சேர்ந்த நர்மதாவுக்கும் திருமணம் நடந்தது. பெற்றோர் சம்மதத்துடன் நடந்த திருமணம் இது.

இப்போது திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், தனது மனைவியுடன் மகிழ்ச்சியான ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் ஹரிஷ் கல்யாண். இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, ’கொஞ்சம் குறும்பு; நிறைய காதல் என ஒரு மாதம் கடந்துள்ளது’ என்று கூறியிருக்கிறார். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘ஓ மணப்பெண்ணே!’. இதற்குப் பிறகு தற்போது, ‘டீசல்’, ’நூறுகோடி வானவில்’ ஆகியத் திரைப்படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இதுதவிர, கிரிக்கெட்டர் தோனி தயாரிப்பில் வெளியாக இருக்கும் முதல் படத்திலும் ஹரிஷ் கல்யாணை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in