வெற்றிமாறனின`விடுதலை’க்காக பிரம்மாண்ட கிராமம் செட்

’விடுதலை’ வெற்றிமாறன்
’விடுதலை’ வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ’விடுதலை’ படத்துக்காக, பிரம்மாண்ட கிராமம் செட் அமைக்கப்பட்டுள்ளது.

’அசுரன்’ படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் படம், ’விடுதலை’. விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். இளையராஜா இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் ’துணைவன்’ கதையைத் தழுவி இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.

விஜய் சேதுபதியுடன் வெற்றிமாறன்
விஜய் சேதுபதியுடன் வெற்றிமாறன்

இந்தப் படத்தின் நான்காவது கட்டப்படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் நடந்து வருகிறது . இதற்காக கிராமம் ஒன்றை அங்கு உருவாக்கியுள்ளனர். கலை இயக்குநர் ஜாக்கி, நிஜ கிராமம் போலவே இந்த அரங்கத்தை அமைத்துள்ளார். இங்கு விஜய்சேதுபதி பங்கேற்ற சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்போது சூரி உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் படமாகி வருகின்றன.

நடிகர் சூரி
நடிகர் சூரி

இந்தக் காட்சிகள் ஜூன் 10-ம் தேதிக்குள் முடிவடையும். இந்த நான்காம் கட்ட படப்பிடிப்பில் மூன்று முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் படமாக்கப்படுகின்றன. இதற்காக படக்குழுவைச் சேர்ந்த 450 பேர் சிறுமலை மலைப் பகுதியில் தங்கியுள்ளனர். வனப்பகுதி என்பதால் மருத்துவருடன் கூடிய ஆம்புலன்ஸ் வசதியையும் படக்குழு ஏற்பாடு செய்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in