பிறந்த நாளில் இளையராஜா வெளியிட்ட இனிப்பான செய்தி!

பிறந்த நாளில் இளையராஜா வெளியிட்ட இனிப்பான செய்தி!

இசை அமைப்பாளர் இளையராஜாவின் இசைப் பயணம் பற்றிய திரைப்படம் உருவாகிறது.

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று (ஜுன் 2) 80-வது பிறந்தநாள். இதை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு முன், அவருக்கு திருக்கடையூரில் சதாபிஷேக விழா நடைபெற்றது. இதில் இளையராஜாவின் குடும்பத்தினர், அவர் சகோதரர் கங்கை அமரன் மற்றும் இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் இன்று அவர் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி, நடிகர் கமல்ஹாசன் உட்பட ஏராளமான திரையுலகினர், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தோடு, கோயமுத்தூரில் அவர் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்நிலையில், தனது பிறந்த நாளை முன்னிட்டு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 'ராஜா - தி மியூசிகல்' என்ற பெயரில் அவருடைய இசைப்பயணம் குறித்த திரைப்படம் தயாராகி வருவது குறித்து தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்தை 2024-ம் ஆண்டு தியேட்டரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதுபற்றி இளையராஜாவின் இசை மேம்பாட்டு நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ' ராஜா -தி மியூசிக்கல் திரைப்படம் 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. இந்தியாவின் மிகச் சிறந்த இசை அமைப்பாளரின் நம்ம முடியாத இசைப் பயணம் இந்தப் படத்தில் இடம்பெறும். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றி விரைவில் அறிவிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in