
தன் உடை பற்றி விமர்சனம் செய்த ரசிகர்களுக்கு நடிகை மீரா நந்தன் பதிலடி கொடுத்துள்ளார்.
பிரபல மலையாள நடிகை மீரா நந்தன் தமிழில் ’சண்டமாருதம்’, ‘வால்மீகி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாள திரையுலகில் கவனம் செலுத்தி வரும் மீரா நந்தன், பெரும்பாலான படங்களில் புடவை, தாவணி ஆகிய உடைகளிலேயே நடித்துள்ளார். ஆனால், அவரது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் அனைத்திலும் கவர்ச்சி தூக்கலாகவே இருக்கும். இதைக் குறிப்பிட்டு ரசிகர் ஒருவர், ‘உங்க புகைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது. பட வாய்ப்புகளுக்காக இப்படியான புகைப்படங்களைப் பதிவிடாமல், படத்தில் நடிப்பது போலவே, இங்கும் புகைப்படங்களைப் பதிவிடலாமே? இந்த மாதிரியான படங்கள் உங்கள் கண்ணியத்தைக் குலைக்கும்’ என கமெண்ட் செய்துள்ளார்.
இதற்கு நடிகை மீரா தனது சமீபத்திய பேட்டியில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ‘நான் படத்தில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படி புகைப்படங்களை பதிவிடவில்லை என்பதைத் தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். கடந்த சில வருடங்களாக துபாயில் வாழ்ந்து வருகிறேன். அங்கு நான் என்ன உடை அணிகிறேன் என யாரும் கவனம் கொள்வதில்லை. அப்படி இருக்கும் போது நான் சமூக வலைதளத்தில் பதிவிடும் புகைப்படங்களால் என்ன பிரச்சினை? படங்களில் என்னை அந்த கதாபாத்திரமாக மட்டுமே பாருங்கள். படத்திற்கு வெளியே எனக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. இன்னும் உடைகளை வைத்து யாரையும் மதிப்பிடாதீர்கள்’ என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.