நடிகர் அஜித்துக்கு பரிசு கொடுத்து அசத்திய ரசிகர்... வைரலாகும் புகைப்படம்!

அஜித்
அஜித்

நடிகர் அஜித்துக்கு ரசிகர் ஒருவர் பரிசு கொடுத்து அசத்தியுள்ளார்.

உலக சுற்றுப்பயணத்தை முடித்துள்ள நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அஜித்துடன் த்ரிஷாவும் இணைந்து நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது அசர்பைஜானில் நடந்து வருகிறதும் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து அவ்வப்போது புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெறுவது வழக்கம்.

ரசிகருடன் அஜித்.
ரசிகருடன் அஜித்.

நடிகை த்ரிஷாவும் கடந்த வாரத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசர்பைஜானில் 'விடாமுயற்சி' படப்பிடிப்புத் தளத்தில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த வகையில், ரசிகர் ஒருவர் நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து அவரது படத்தை வரைந்து பரிசாகக் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in