பிரபல ஹீரோவிற்கு மாரடைப்பா?: மருத்துவமனை சென்றது ஏன் என நடிகர் விளக்கம்

நடிகர் விமல்.
நடிகர் விமல்.

மாரடைப்பு காரணமாக நடிகர் விமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பரவிய தகவலுக்கு அவரே பதில் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோக்களில் ஒருவர் விமல். இவர் தொடக்க காலத்தில் 'கில்லி', 'கிரீடம்', 'குருவி', 'பந்தயம்', 'காஞ்சிவரம்' உள்பட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க' படத்தின் மூலம் கதாநாயனாக மாறினார். இதன் பின் 'களவாணி', 'வாகை சூட வா', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா','தேசிங்கு ராஜா','ஜன்னல் ஓரம்', 'புலிவால்' உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் நடித்த 'விலங்கு' இணைய தொடர் வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் நடிகர் விமல் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதனையறிந்த விமலின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து நடிகர் விமல் கூறுகையில்," எனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறுவது தவறான தகவல். இப்படி யாரோ கிளப்பி விட்டுள்ளார்கள். கடந்த 10 நாட்களுக்கு முன்பு லேசான இருமல் காரணமாக மருத்துவமனைக்குச் சென்றேன். இப்போது நலமாக உள்ளேன்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in