நடிகர் விஜய் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகை

நந்தினி ராய்
நந்தினி ராய்

நடிகர் விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தில் பாலிவுட்டில் அறிமுகமான பிரபல நடிகை நந்தினி ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் 'வாரிசு' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம் ஆகியோர் நடிக்கின்றனர். 2023-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறைவடைந்து பின்னணி பணிகள் தொடங்க உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் மூலம் நடிகையாக அறிமுகமான நந்தினி ராய் நடிக்கிறார். இதன்பின் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நந்தினி ராய் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in