வைரல் வீடியோ... யுவனின் பாடலை தமிழில் பாடி அசத்திய சீன ரசிகர்!

யுவனுடன் சீன ரசிகர்
யுவனுடன் சீன ரசிகர்

யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல் ஒன்றைத் தமிழில் பாடி அசத்திய சீன ரசிகர் ஒருவரின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜாவின் ஹிட் பாடல் ஒன்றை விமான நிலையத்தில் சீன ரசிகர் ஒருவர் தமிழில் பாடி அசத்தியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 'பையா' படத்தில் இருந்து துளி துளி மழையாய் வந்தாளே பாடலை அந்த சீன ரசிகர் பாட யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சுற்றியிருப்பவர்கள் உற்சாகத்தில் கைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

லிங்குசாமி இயக்கத்தில் 'பையா' திரைப்படம் கடந்த 2010ம் ஆண்டு வெளியானது. படமும் பாடல்களும் இப்போது வரையும் இளைஞர்கள் மத்தியில் ஹிட்டாகியுள்ள நிலையில் இதன் இரண்டாம் பாகமும் விரைவில் தொடங்க இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா தற்போது 'தளபதி68' படத்திற்கு இசையமைக்கிறார். யுவன் - விஜய் கூட்டணி கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in