பதான் படத்தில் ஷாருக்கான்-தீபிகா படுகோனே
பதான் படத்தில் ஷாருக்கான்-தீபிகா படுகோனே12 நாட்களில் 832 கோடி வசூல்: சாதனை படைத்தது ஷாருக்கானின் 'பதான்'

12 நாட்களில் 832 கோடி வசூல்: சாதனை படைத்தது ஷாருக்கானின் 'பதான்'

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த `பதான்' திரைப்படம் 12 நாட்களில் 832 கோடி வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் `பதான்'. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 25-ம் தேதி இந்தியா முழுவதிலும் 8,000 திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், `பதான்' திரைப்படம் 12 நாட்களில் 832 கோடி வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பாலிவுட்டின் பாஷா என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஷாருக்கான். இந்தியாவில் பதான் திரைப்படம் 515 கோடி ரூபாயும், வெளிநாட்டில் 317 கோடி வசூல் என 832 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக கூறப்படுகிறது

இதனிடையே இப்படத்தின் வசூல் ஹிந்தி சினிமாவின் வரலாற்றையே மாற்றியுள்ளது. பதான் திரைப்படம் ரிலீஸான 12 நாட்களில் பாகுபலி 2, கேஜிஎப் 2 உள்ளிட்ட படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. ராஜமௌலியின் பாகுபலி 2 படம் இந்திய அளவில் 400 கோடி வசூலை எடுக்க 15 நாட்கள் ஆனது. அதை போலவே நடிகர் யாஷின் கேஜிஎப் 2 படம் 400 கோடி வசூலை எடுக்க 23 நாட்களானது. ஆனால் பதான் திரைப்படம் 12 நாட்களில் மட்டும் இந்திய அளவில் 500 கோடி வசூலை எடுத்து மேற்கண்ட படங்களின் சாதனையை முறியடித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in