இந்தியாவை ஒன்றிணைத்த ஒரு விளையாட்டு - ‘83’ டிரைலர்

1983-ம் ஆண்டு முதன்முறை இந்தியா கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘83’. கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி எதிர்கொண்ட தடைகளையும், புறக்கணிப்புகளையும், விமர்சனங்களையும் உயிர் ஊட்டி காட்சிப்படுத்தியிருக்கிறது இத்திரைப்படம் என்பதை தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லரில் உணரமுடிகிறது. குறிப்பாக ரன்பீர் சிங் பார்ப்பதற்கு கபில்தேவ் போன்றே தோற்றமளிக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்வு அனைத்தும் கச்சிதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், இந்தியா கோப்பையை வென்றதும் குதூகலிக்கும் மக்கள் கூட்டத்தில் குட்டி சச்சின் டெண்டுல்கரை காட்டியிருப்பது ரசிகர்களுக்கு இனிமையான ஆச்சரியமாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in