
இந்தியாவில் கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, திரையரங்கில் 50 சதவீதம் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி போன்ற கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு விதித்துள்ளது. இதனால், பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த சில புதிய திரைப்படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அஜித்குமார் நடித்துள்ள ’வலிமை’, ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் நடித்துள்ள ‘ஆர்ஆர்ஆர்’, பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துள்ள ’ராதே ஷ்யாம்’, விஷாலின் ’வீரமே வாகை சூடும்’ ஆகிய படங்கள் பொங்கல் ரேஸில் இருந்து விலகியுள்ளன.
பெரிய படங்கள் ஒதுங்கியதால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, ’கொம்பு வச்ச சிங்கம்டா’, ’நாய் சேகர்’, ’என்ன சொல்ல போகிறாய்’, ’ஏஜிபி’, ’மருத’, ’கார்பன்’, ’பாசக்கார பய’, ’ஐஸ்வர்யா முருகன்’ ஆகிய 8 திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. இதில் சசிகுமாரின் 'கொம்பு வச்ச சிங்கம்டா', நாய்சேகர் படங்களுக்கு அதிகத் திரையரங்குகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது