இந்த மனசு யாருக்கு வரும்: ‘ 777 சார்லி’ பட தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு

இந்த மனசு யாருக்கு வரும்:  ‘ 777 சார்லி’ பட  தயாரிப்பாளர் எடுத்த அதிரடி  முடிவு

’777 சார்லி’ வசூலின் ஒரு பகுதியை படத்தி்ல் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வழங்க நடிகரும், தயாரிப்பாளருமான ரக்‌ஷித் ஷெட்டி முடிவு செய்துள்ளார்.

கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி, தயாரித்து நடித்த படம், ’777 சார்லி’. பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளிலும் வெளியானது. கிரண்ராஜ் கே இயக்கிய இந்தப் படத்தில் சங்கீதா சிருங்கேரி, பாபி சிம்ஹா, ராஜ் பி ஷெட்டி உட்பட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.

ஒரு மனிதனுக்கு, நாய்க்கும் இடையிலான பாசத்தை உணர்வுபூர்வமாகச் சொன்ன படம் இது. ஜூன் 10-ம் தேதி வெளியான இந்தப் படம் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் 450-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே இதில் கிடைத்த லாபத்தில் 5 சதவீதத்தை நாய்கள் உள்ளிட்ட விலங்குகளைப் பராமரிக்கும் தொண்டு நிறுவனத்துக்கும் ,10 சதவீதத்தை படத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் வழங்க ரக்‌ஷித் ஷெட்டி முடிவு செய்துள்ளார். ரஷ்கித்தின் இந்த முடிவை, ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பாராட்டியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in