சினிமா பிட்ஸ்

சினிமா பிட்ஸ்

பிட்லீ
readers@kamadenu.in

சினிமா, ஓடிடி என்று பிசியாக இருந்தாலும் நேரம் ஒதுக்கி புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார் தமன்னா. ‘பேக் டூ தி ரூட்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகத்தில், இந்தியாவின் பாரம்பரிய வாழ்க்கை முறை வாயிலாக நோய்களை எதிர்கொள்வதைப் பற்றி எழுதியுள்ளாராம் தமன்னா.

தமிழ்லயும் மொழி பெயர்ப்போமா மேம்?

இயக்குநர்கள் ஷங்கர், மணிரத்னம், வெற்றிமாறன், ஏ.ஆர்.முருகதாஸ், மிஷ்கின், கௌதம் மேனன், லிங்குசாமி, சசி, வசந்த பாலன், பாலாஜி சக்திவேல் மற்றும் லோகேஷ் கனகராஜ் போன்ற தமிழின் முன்னணி இயக்குநர்கள் இணைந்து ‘ரெயின் ஆன் ஃபிலிம்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘நவரசா' மாதிரி இது ‘லெவன்ரசா' போல...

‘ஃபேமலி மேன் -2' தொடர், விடுதலைப்புலிகளை இழிவுபடுத்துவதாக இருப்பதாக சர்ச்சை வெடித்த நிலையில் அத்தொடரில் விடுதலைப் போராளி கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா, ‘மக்களின் சென்டிமென்ட்டை காயப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்கிறேன்’ என்று இப்போது வருத்தம் தெரிவித்திருக்கிறார். ‘கடந்த ஜூன் மாதமே வெளியான தொடருக்கு அப்போதே வருத்தம் தெரிவிக்காமல், தமிழில் வெளியாகும் போது மன்னிப்பு கேட்பது சரியா‘ என்று சமூக வலைதளங்களில் இப்போது விமர்சனங்கள் பறக்கின்றன.

ஒரு வேளை அண்ணன் போன் போட்ருப்பாரோ..!

தெலுங்குத் திரையுலகில் போதைப் பொருள் பயன்பாடு இருக்கிறது என்று 2017-ம் ஆண்டு எழுந்த புகார் இன்னும் ஓயவில்லை. ராகுல் ப்ரீத் சிங்கை இப்போது விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கிறது அமலாக்கத் துறை. ‘ராட்சசன்’ படத்தின் ஹிந்தி ரீமேக், ‘இந்தியன் 2’, ‘அயலான்’ போன்ற முக்கியமான படங்களில் ராகுல் ப்ரீத் சிங் தற்போது நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவங்க கண்ணே போதைப்பொருள்தான்...

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகை ஐஸ்வர்யா ராயின் படம் லீக் ஆனதைத் தொடர்ந்து, அப்செட்டான மணிரத்னம் மிகக் கடுமையாகப் படக்குழுவை எச்சரித்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் எந்த விதமான படங்களும் எடுக்கக் கூடாது, அதை சமூக வலைதளங்களில் பகிரக் கூடாது என்று படக்குழுவுக்கு அறிவுறுத்தப் பட்டிருக்கிறதாம்.

அதையும் நம்மகிட்ட சொல்லிட்டாங்க பாருங்க...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in