'பிக் பாஸ்' பிரபலம் நடிக்கும் படத்தில் 7 கதாநாயகிகள்!

'பிக் பாஸ்' பிரபலம் நடிக்கும் படத்தில் 7 கதாநாயகிகள்!

'பிக் பாஸ்' பிரபலம் கதாநாயகனாக நடிக்கும் ஃபேன்டஸி காமெடி படத்தில் 7 கதாநாயகிகள் நடிக்க இருக்கின்றனர்.

பரத் நடித்த, ’பிப்ரவரி 14’ , சாந்தனு, சத்யராஜ் நடிப்பில் ’ஆயிரம் விளக்கு’ படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஹோசிமின். இவர் இயக்கத்தில், ஜப்பானைச் சேர்ந்த யோஷிநோரி டாஷிரோ, மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் , யோகி பாபு , விடிவி கணேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’சுமோ’. இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து, வசந்த் ராமசாமியின் ஸ்ரீ அன்னமார் புரொடக்சன்ஸுடன் இணைந்து, இயக்குநர் எஸ்.பி.ஹோசிமின் தயாரிக்கும் படம், ’ரெயின்போ’. இதில், 'பிக் பாஸ்' நிரூப் நாயகனாக நடிக்கிறார்.

நிரூப், சிம்ரன் ராஜ்
நிரூப், சிம்ரன் ராஜ்

சிம்ரன் ராஜ் உட்பட ஏழு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இவர்களுடன் வானவில் பிரதான கதாபாத்திரமாக வருகிறது. மற்றும் மைம் கோபி , மனோபாலா , சார்லஸ் வினோத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இயக்குநர் ஹோசிமினின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகும் இந்தப் படத்தை விவேக் கைபா பட்டாபிராம் இயக்குகிறார். வினோத் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு சுபாஷ் ஆனந்த் இசை அமைக்கிறார். ஃபேன்டஸி காமெடி படமாக உருவாகும் இதன் பூஜை சென்னையில் நடைபெற்றது.

ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், இயக்குனர்கள் ஆர்.ரவிக்குமார், ஆர். மாதேஷ் , ஜப்பான் தொழிலதிபர் குறிஞ்சி செல்வன், 'பிக் பாஸ்' அபினய் , சுரேஷ் சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in