69வது தேசிய விருதுகள்
69வது தேசிய விருதுகள்

69வது தேசிய விருதுகள் அறிவிப்பு; ஆர்.ஆர்.ஆர். படத்துக்கு 6 விருதுகள்... முழு லிஸ்ட்!

டெல்லியில் இன்று மாலை 69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 

சிறந்த படங்கள், நடிக, நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகிறது.

அதன்படி நாட்டின் 69வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை தமிழ் சினிமாவுக்கு ஏராளமான பிரிவுகளில் விருதுகள் கிடைத்ததால் இந்த முறையும் தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டிற்கான சிறந்த கன்னட படத்திற்கான விருதை ‘777 சார்லி’ வென்றது. மலையாளத்தில் ‘ஹோம்’ திரைப்படமும் தமிழில் ‘கடைசி விவசாயி’ திரைப்படமும் தெலுங்கில் ‘உப்பன்னா’ படமும் தேசிய விருதை வென்றுள்ளன.

ஆக்‌ஷன் மாஸ்டர் கிங் சாலமன், பிரேம் ரக்‌ஷித் நடனம், ஸ்பெஷல் எஃபெக்ட் ஸ்ரீனிவாஸ் மோகன் என ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் தேசிய விருதில் தொழில்நுட்ப பிரிவிலும் ஆதிக்கம் செலுத்தியது.

 ‘கடைசி விவசாயி’
‘கடைசி விவசாயி’

’புஷ்பா1’ படத்தின் இசைக்காக தேசிய விருதை தேவி ஸ்ரீ பிரசாத்தும், ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக கீரவாணியும் வென்றனர். 'இரவின் நிழல்’ படத்தின் ‘மாயவா’ பாடலுக்காக ஷ்ரேயா கோஷலும், ‘ஆர்.ஆர்.ஆர்.’ ’கோமுரம் பீமுடு’ பாடலுக்காக காலபைரவாவும் வென்றனர்.

 ‘ஆர்.ஆர்.ஆர்.’
‘ஆர்.ஆர்.ஆர்.’

சிறந்த நடிகைக்கான விருதுகளை அலியா பட் (கங்குபாய்) மற்றும் கீர்த்தி சனோன் (மிமி) ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். சிறந்த நடிகருக்கான விருதை அல்லு அர்ஜூன் ‘புஷ்பா1’ படத்திற்காக பெற்றார். சிறந்த படத்திற்கான விருதை ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ படமும், சிறந்த எண்டர்டெயின்மெண்ட் படத்திற்காக ‘ஆர்.ஆர்.ஆர்.’ படமும் வென்றது. இந்தியில் சிறந்த படத்திற்காக ‘ராக்கெட்டரி நம்பி விளைவு’ பெற்றுள்ளது. அதிகபட்சமாக 6 தேசிய விருதுகளை ஆர்ஆர்ஆர் படம் அள்ளியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in