‘கொஞ்சம் பேசு’ நெஞ்சைத் தொடும்!- சஞ்சிதா ஷெட்டி பேட்டி

‘கொஞ்சம் பேசு’ நெஞ்சைத் தொடும்!- சஞ்சிதா ஷெட்டி பேட்டி

ரசிகா
readers@kamadenu.in

கன்னடத்திலிருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் பெங்களூரு பெண்ணான சஞ்சிதா ஷெட்டி. சர்ச்சைகள் எதிலும் சிக்காமல், கதாநாயகியாக நடைபோட்டுவரும் சஞ்சிதா, படங்களை கவனமாகத் தேர்தெடுப்பதிலும் கெட்டி. தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களை நம்பும்விதமாக நடித்துக் கொடுப்பதில் செம சுட்டி. தற்போது பிரபுதேவாவுடன் ‘பகீரா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துவருகிறார். இயக்குநர் ராஜு முருகன் தயாரித்துள்ள ‘கொஞ்சம் பேசு’ என்கிற தனியிசைப் பாடலின் இசைக் காணொலியிலும் முதல் முறையாக நடித்திருக்கும் சஞ்சிதா,  காமதேனு மின்னதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி.
  
இவர்தான் சஞ்சிதா என்று சொன்ன படம் ‘சூது கவ்வும்’. அந்தப் படம் வெளியாகி 8 வருடங்கள் ஓடிவிட்டன. எப்படி உணர்கிறீர்கள்?

எட்டு வருடங்கள் ஓடிவிட்டது என்பதை நம்பமுடியவில்லை. ப்ளஸ் 2 முடித்துவிட்டு கல்லூரியில் பி.காம்., முதலாமாண்டு சேர்ந்திருந்தேன். அப்போது வந்த வாய்ப்புதான் ‘சூது கவ்வும்’. வயதுக்கு மீறிய கதாபாத்திரம்தான். ஆனால், அதை சிறப்பாகச்
செய்தேன் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமாவில் பத்துபடங்கள் பண்ணினால்தான் அந்தமாதிரி ஒரு கதாபாத்திரம் கிடைக்கும். ‘சூது கவ்வும்’படத்துக்குப் பிறகு 20 படங்களில் நடித்துவிட்டேன். ஆனால், இன்றும் ‘சூது கவ்வும்’ பற்றித்தான் எங்கே போனாலும் பேசுகிறார்கள். அதுதான் அந்தக் கதாபாத்திரத்தின், இயக்குநரின் வெற்றி.

அசோக் செல்வன், அனிருத்தின் தம்பி ரிஷி தொடங்கி இப்போது திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவகுமார் வரை புதுமுகக் கதாநாயகர்களை அறிமுகப்படுத்தும் படங்களில் உங்களை கதாநாயகி ஆக்கும் ரகசியம்தான் என்ன?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in