
இந்திய அரசு சார்பில் திரையுலகினரை கெளரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 69வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நடிகர் மாதவன் எழுதி, இயக்கி, நடித்திருந்த ராக்கெட்டரி படத்திற்கு, சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை சரிதத்தையொட்டி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியிலும் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.