ஓ.டி.டி. உலா:‘தி ஃபேமிலி மேன்’ - பொழுதுபோக்கும் புரிதலின்மையும்

ஓ.டி.டி. உலா:‘தி ஃபேமிலி மேன்’ - பொழுதுபோக்கும் புரிதலின்மையும்

எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

‘தி ஃபேமிலி மேன்’ வலைத்தொடரின் முதல் சீஸன் 2019-ல் வெளியானபோது, அமேசான் பிரைம் வீடியோவின் ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட வலைத்தொடராக சாதனை படைத்தது. அண்மையில் வெளியாகியிருக்கும் அதன் இரண்டாம் சீஸனுக்கு எதிராகச் சர்ச்சைகள் சுழன்றடித்தாலும், பொழுதுபோக்கு படைப்பு என்ற அடிப்படையில் பழைய பெருமையைத் தக்க வைத்திருக்கிறது ‘தி ஃபேமிலி மேன்-2’.

அசாதாரணர்களின் சாதா முகம்

உலகைக் காக்க அவதரித்த சூப்பர் ஹீரோக்களின் கதைகள், அவை அறிமுகமான வேகத்தில் வரவேற்பைக் குவித்தாலும் ஒரு கட்டத்தில் அவையே அலுக்கத் தொடங்கின. எனவே அதிநாயகர்கள் தங்கள் பீடங்களிலிருந்து சற்றே இறங்க வேண்டியதாயிற்று. களத்தில் சூரர்கள் என்றபோதும் தனிப்பட்ட வாழ்க்கையில் சாமானியர்களின் பலவீனங்கள், தடுமாற்றங்கள், மனச்சாய்வுகளை வரிந்துகொள்ள வேண்டியதாயிற்று. இதற்காக ஹீரோக்களின் குடும்பம் குறித்த கிளைக்கதைகளும் அவற்றின் பொருட்டான அன்பு, பாசம், காதல், துரோகம் உள்ளிட்ட சுவாரசியங்கள் சேர்ந்தன. தங்களின் அன்றாட பாடுகள் அனைத்திலும் தங்கள் ஆதர்ச நாயகனைக் கண்ட ரசிகர்கள், இதுபோன்ற படைப்புகளைக் கொண்டாடினார்கள் . அர்னால்டு நடிப்பிலான ‘ட்ரூ லைஸ்’ மற்றும் ‘இன்க்ரிடிபிள்ஸ்’ வரிசை அனிமேஷன் திரைப்படங்கள் ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம். இந்த பாணியின் செம்மையான இந்தியப் பதிப்புதான் ‘தி ஃபேமிலி மேன்’ வலைத்தொடர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in