விளம்பரங்களில் நடிப்பதில் தவறே இல்லை!- அவந்திகா மிஸ்ரா பேட்டி

விளம்பரங்களில் நடிப்பதில் தவறே இல்லை!- அவந்திகா மிஸ்ரா பேட்டி

ரசிகா
readers@kamadenu.in

தமிழ்த் திரையுலகுக்கு அழகிய அறிமுகமாக, தலைநகர் டெல்லியிலிருந்து வந்திருக்கிறார் அவந்திகா மிஸ்ரா. அசோக் 
செல்வனுடன் ‘நெஞ்சமெல்லாம் காதல்’ படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்திருக்கிறார். முதல் படம் வெளியாவதற்கு முன்பே, 
அருள்நிதி நடிக்கும் படத்திலும் நாயகியாகியிருக்கிறார். அவரிடம் ஒரு ‘சிட் சாட்’ உரையாடல்...

உங்களை ‘சென்னை சில்க்ஸ்’ விளம்பரத்தில் பார்த்ததாக நினைவு...

ஆமாம்… எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? தனிஷ்க் ஜுவல்லரி, சென்னை சில்க்ஸ் ஆகிய இரண்டு விளம்பரங்கள் வழியாகத்தான் எனக்குத் தமிழ்ப் பட வாய்ப்புகள் அமைந்தன. அப்பா இந்திய விமானப் படையில் அதிகாரி. பள்ளியில் நன்றாகப் படிப்பேன். 8-ம் வகுப்பில் புரொமோஷன் கொடுத்து நேரே 10-ம்வகுப்புக்கு அனுப்பிவிட்டார்கள். “பெங்களூருவில் கெமிக்கல் இன்ஜினியரிங் படி” என்றார் அப்பா. அவருக்காகப் படித்து முடித்துவிட்டு ஓராண்டு ஐடி துறையில் பணிபுரிந்தேன். மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பளம். அப்போது மாடலிங் வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஒருகட்டத்தில், அதிக நாள் விடுமுறை எடுக்க முடியாத அளவுக்கு வாய்ப்புகள் குவிந்துவிட்டன. உடனே வேலைக்கு குட்பை சொல்லிவிட்டு, முழுநேர விளம்பர மாடல் ஆனேன். இப்போது சினிமா, மாடலிங் இரண்டிலும் நடித்துக்கொண்டிருக்கிறேன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in