செக் மோசடி வழக்கில் பிரபல இயக்குநருக்கு 6 மாத சிறைத்தண்டனை: சென்னை நீதிமன்றம் அதிரடி

செக் மோசடி வழக்கில் பிரபல இயக்குநருக்கு 6 மாத சிறைத்தண்டனை: சென்னை நீதிமன்றம் அதிரடி

செக் மோசடி வழக்கில் திரைப்பட இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக திகழ்பவர் லிங்குசாமி. 'ஆனந்தம்', 'சண்டைக்கோழி',' ஜி', 'ரன்', 'வாரியர்' போன்ற படங்களை இவர் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் செக் மோசடி வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. பிவிபி தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in