23 வயது பெண்ணுடன் 56 வயதான நடிகர் பப்லு 2-வது திருமணம்?

23 வயது பெண்ணுடன் 56 வயதான நடிகர் பப்லு 2-வது திருமணம்?

மலேசியாவை சேர்ந்த 23 வயது பெண்ணுடன் நடிகர் பப்லு என்கிற பிரித்விராஜ் 2-வது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, கனடா மொழி படங்களில் நடித்துள்ள பப்லு என்கிற பிரித்விராஜ், முதல் முறையாக `நான் வாழவைப்பேன்' படத்தில் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான `வானமே எல்லை' படத்தில் இளமை தோற்றத்தில் நடித்தார். நீதி, டாக்டர் சிவா, நாளை நமதே, பாரத விலாஸ், நான் சிகப்பு மனிதன், ஒரு தாயின் சபதம், பாண்டி நாட்டு தங்கம், சிகரம், அழகன், மணிரத்னம், வீரமணி, அவள் வருவாளா, நாகேஸ்வரி, வாரணம் ஆயிரம் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் பப்லுவுக்கு பினா என்கிற பெண்ணுடன் ஏற்கெனவே திருமணம் ஆனது. இருவருக்கும் 25 வயதில் அஹத் எனும் மகன் ஒருவர் உள்ளார். இவரது மகனுக்கு ஆட்டிசம் குறைபாடு இருந்ததன் காரணமாக சில ஆண்டுகள் சினிமா மற்றும் சீரியலில் இருந்து ஓய்வெடுத்து மகனை குணப்படுத்த ஏகப்பட்ட சிகிச்சைகளையும் பப்லு மேற்கொண்டார். இந்நிலையில், பப்லுவுக்கும் அவரது மனைவி பினாவுக்கும் மன உளைச்சல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், நடிகர் பப்லு 2-வது திருமணம் செய்து கொண்டார் என்றும், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்த வயதிலும் தான் சிக்ஸ்பேக் வைத்துக் கொண்டு இளமையாக இருக்க இவர் தான் காரணம் என பப்லு பேசியதை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 56 வயதாகும் பப்லு இரண்டாவதாக 23 வயதுடைய மலேசிய பெண்ணுக்கும் எப்போது திருமணம் நடைபெற்றது என்கிற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. நடிகர் பப்லுவுக்கு உண்மையாகவே 2-வது திருமணம் நடைபெற்றதா? அல்லது இது வதந்தியா? என்பதை அவர்தான் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் திருமண சர்ச்சை ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். முற்றுப்புள்ளி வைப்பாரா பப்லு?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in