எல்லாப் புகழும் அப்பாவுக்கே!- ஜெமினியின் மகளுடன் ஒரு ஃப்ளாஷ் பேக் சந்திப்பு

எல்லாப் புகழும் அப்பாவுக்கே!- ஜெமினியின் மகளுடன் ஒரு ஃப்ளாஷ் பேக் சந்திப்பு

பிரேமா நாராயணன்
premaa.narayanan@gmail.com

‘கமலா கணேஷ்’ என்று வாசலில் பெயர் பொறித்திருக்கும் அழகிய இல்லம்... போர்டிகோவில் நிற்கும் விதவிதமான ‘ஹை எண்ட்’ கார்கள்... இரவில் மழை பெய்த மிச்சத்துளிகளில் இளம் காலை வெயில் பட்டுத் தெறிக்கும் இலைகள் அடந்த மரங்கள்... வீட்டுக்குள் நுழையும்போதே வரவேற்கிறார், ஒரு சிறிய பீடத்தில் அமர்ந்திருக்கும் கலைநயமிக்க விநாயகர். அவருக்குப் பின்னால் பசுமையான புல்தரையும் செடிகளும்... கண்களுக்கும் மனதுக்கும் இதமான சூழல். தஞ்சாவூர் ஓவியங்கள் வரவேற்கும் பெரிய கூடத்தின் நடுவே ஊஞ்சல்...

பழைமையும் நவீனமும் கலந்து கட்டப்பட்ட அந்த வீட்டின் அழகை ரசித்துக் கொண்டிருக்கும்போதே, ‘‘வாங்க, வாங்க... வணக்கம்!’’ என்று மலர்ந்த புன்னகையுடன் வருகிறார் டாக்டர் கமலா செல்வராஜ். அரக்கு வண்ணப் புடவையில் எளிமையாக இருந்தார், எவர் கிரீன் காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மகள். சென்னையின் பிரபல மருத்துவர். குழந்தைச் செல்வம் இல்லாமல் ஏங்கும் எத்தனையோ தம்பதியரின் மடியில் மழலைகளைத் தவழவைத்து, அந்த மனங்களை மகிழ்ச்சியால் நிரப்பியவர். காலையில் சுறுசுறுப்பாக மருத்துவமனைக்குக் கிளம்பியிருந்தவர், நமக்காக சிறிது நேரம் ஒதுக்கியிருந்தார்.

“நான் இன்னும் சாப்பிடல... சாப்பிட்டுக்கிட்டே பேசலாமா?” என்றபடி டைனிங் டேபிள் முன் அமர்ந்த கமலா செல்வராஜிடம், ஜெமினி கணேசன் பற்றிய நினைவிலிருந்து உரையாடலைத் தொடங்கினோம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in