குறைந்த பட்ஜெட்ல ஒரு ஏலியன் படம்!

குறைந்த பட்ஜெட்ல ஒரு ஏலியன் படம்!

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

“வானத்தை வேடிக்கைப் பார்க்கிறதுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். நாமெல்லாம் ராத்திரியில வானத்தைப் பார்க்கிற மாதிரி வானத்திலிருந்து யாராச்சும் பூமியைப் பார்த்துட்டு இருப்பாங்கங்கிற நினைப்பே சுவாரசியமா இருக்குல்ல? இப்பல்லாம் மக்கள் ஸ்மார்ட்போனைப் பார்த்துட்டு குனிஞ்ச தலையோடதானே அலையிறாங்க… அவங்க கவனத்தை வானத்தை நோக்கி நிமிர்த்தத்தான் இந்த முயற்சி”  சுவாரசியமாக ஆரம்பிக்கிறார் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ பட இயக்குநர் கவிராஜ்.

திரைப்படத் துறைக்கு எப்படி வந்தீங்க?

காலேஜ் படிக்கும்போதே போட்டோ, வீடியோ எடிட்டிங் வேலைகள்ல ஆர்வம் அதிகம். காலேஜ் முடிச்சிட்டு மல்டிமீடியா படிச்சேன். சன் டிவி-யில வேலைக்குச் சேர்ந்தேன். ‘வணக்கம் தமிழகம்’, ஆதித்யா டிவி-யின் ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ மாதிரியான நிகழ்ச்சிகள்ல புரொடக் ஷன் டிபார்ட்மென்ட்ல வேலை பார்த்தேன். அங்கதான் டைர க்‌ஷன் பற்றித் தெரிஞ்சிக்கிட்டேன். டைரக்டர் ஆகணும்னு ஆசை வந்தது. அந்த ஆசை இதோ ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ படம் மூலமா நனவாகியிருக்கு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in