நிஜத்துல நான் ரொம்ப அமைதிங்க! - ‘பூவே பூச்சூடவா’ ரேஷ்மா

நிஜத்துல நான் ரொம்ப அமைதிங்க! -  ‘பூவே பூச்சூடவா’ ரேஷ்மா

உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@thehindutamil.co.in

நதியா நடித்துக் கலக்கிய ‘பூவே பூச்சூடவா’ திரைப்படத்துக்கும் இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘பூவே பூச்சூடவா’ சீரியலுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறதென்றே சொல்லலாம்.

எப்படீன்னா, டஸ்கி ஸ்கின் டோனோடு மலையாள தேசத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து தனக்கென ஒரு ஸ்டைலையே உருவாக்கியவர் நதியா. அப்படித்தான் அதே தேசத்திலிருந்து டார்க் ஸ்கின் கலரில் தமிழ் தொலைக்காட்சியில் தனக்கென ஒரு பாணியை வைத்துக்கொண்டு பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் (சக்தி) ரேஷ்மா. நதியா ஸ்டைல் என்று ஒரு காலத்தில் எப்படிக் கொண்டாடினார்களோ அதுபோல ரேஷ்மா ஹேர் ஸ்டைல், டிரெஸ்ஸிங் என கல்லூரிப் பெண்கள் இப்போது டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்!

தனிப்பட்ட நடிப்பிலும், ரொமான்ஸ் காட்சிகளிலும் பின்னிப் பெடலெடுக்கும் ரேஷ்மாவைச் சந்திக்கலாமா என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், தாம்பரத்தில் ஒரு கோயிலில் சீரியல் ஷூட்டிங் நடப்பதாகத் தகவல் காதோரம் கசிந்தது. அடுத்த ஒரு மணி நேரத்தில் நானும் அங்கிருந்தேன்.

சாமியார் கேரக்டரில் இருந்த ஒருவரோடு கறுப்பு கவுனும் பாப் கட் தலையுமாய் ஒரு பெண் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். இன்னும் கொஞ்சம் பக்கமாய் போய்ப் பார்த்தால்... அட, நம்ம ரேஷ்மா! “என்னங்க அழகா புடவையில அப்பியரன்ஸ் கொடுப்பீங்கன்னு பார்த்தா... இப்படி டோரா கெட்டப்புல நிக்கிறீங்க?”என்று செல்லமாய் கோபித்துக்கொண்டேன்.
``கூல்... கூல்... கதையில சின்னதா ஒரு கலாட்டா. நானும் ரன்பீரும் (சாமியார்) வேஷம் போட்டு ஏமாத்துறது மாதிரி, அதுக்காகத்தான் இந்த கெட்டப். எனக்கே என்னைப் பாக்க ரொம்ப காமெடியா இருக்கு’’ என்று ரொம்பவே ஃபீல் பண்ணினார் ரேஷ்மா. “சூப்பர் வுமன் சக்தி இப்போ அழகு டோராவா அசத்தலா இருக்கீங்க?” என்று நான் கூலாகவும், “நிஜமாவா?” என்றவர், ஒருமுறை தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்து கண்ணடித்துக்கொண்டார்.

அப்புறம், ரேஷ்மாக்கு ஆக்டிங்ல இன்ரஸ்ட் எப்படி, எப்போ வந்தது?

நடிக்க வருவேன்னு நானே நினைச்சுக்கூட பாக்கல. என்னோட பூர்விகம் கேரளாதான். ஆனா, வளர்ந்தது, படிச்சது எல்லாம் பெங்களூருல. காலேஜ் படிக்கிறதுக்காக சென்னைக்கு வந்தேன். அப்ப இருந்து இப்பவரை இந்த மண்ணுதான் நமக்கு எல்லாமே. பட், எப்படியும் ஒருதடவையாவது டிவியில வரணும், முகம் காட்டணும்னு நான் ஆசைப்பட்டது நிஜம். அந்த டைம்லதான் ஜீ தமிழ்ல வந்த டான்ஸ் போட்டியில கலந்துக்கிட்டேன். இத்தனைக்கும் நான் ப்ராப்பரா டான்ஸ் கத்துக்கல. ஸ்கூல்ல மேடையில ஆடினதுதான். ஆனாலும் எனக்கு டான்ஸ்னா உயிர். எந்த வீடியோ பார்த்தாலும் அந்த ஸ்டெப்பை பார்த்து ஆடுவேன். அந்த நம்பிக்கையில போட்டியில கலந்துக்கிட்டேன். அந்த போட்டி மூலமா டான்ஸ் நுணுக்கங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். அந்த போட்டியில் ஃபைனல்ல ரன்னர் அப் வந்தேன். அதுதான் சீரியல்ல நடிக்கிறதுக்கு எனக்கான என்ட்ரி கார்டு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in